இந்தியா

வசந்த பஞ்சமியை ஒட்டி கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

வசந்த பஞ்சமியை ஒட்டி கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வசந்த பஞ்சமி விழாவை முன்னிட்டு, அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு செய்தனர். இதனால் சங்கம் காட் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வசந்த பஞ்சமி விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. வடமாநிலங்களில் குளிர்காலம் நிறைவடைந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மாசி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி, வசந்த பஞ்சமி விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது அதிகாலையில் புனித நீராடி, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

00 Comments

Leave a comment