news-tamil-logo

3/22/2026, 9:47:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home bigstoriesnews Sun screen-னால புற்றுநோய் வருதா? அழகு Cream-ஆல் உயிருக்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
tv

Also Watch

tv

Read this

Sun screen-னால புற்றுநோய் வருதா? அழகு Cream-ஆல் உயிருக்கு ஆபத்தா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

புற்றுநோய் ஏற்படும் அபாயம்

Posted on: Jun 28, 2025 08:08 AM

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sun screen

கோடைக் காலம் ஆரம்பிச்சுட்டாலே போதும், வெயிலால சருமம் பாதிக்கப்பட்ருமோங்குற பயமும் பலருக்கு தொற்றிக்கும். அப்படி தோல் பாதிக்கப்படாம இருக்க Sun screen போன்ற கிரீம் வகைகளை பயன்படுத்துறது வழக்கம். அப்படி பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் Sun screen-னால புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதா வெளியாகியுள்ள தகவல்கள் தான் பலரையும் அதிர்ச்சியில ஆழ்த்தியிருக்கு

சுளீர்னு அடிக்குற வெயில் உடம்புல பட்டு தோல் கருக்காம இருக்க பயன்படுத்தப்படும் பொருள் தான் Sun screen. தற்சமயம் பல தோல் மருத்துவர்களாலயும் இந்த Sun screen அவங்கங்க சருமத்துக்கு ஏற்றார்போல பரிந்துரைக்கப்படுது. ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்துக்கும் ஒருமுறை இத அப்ளை செய்யணும்னு மருத்துவர்களால சொல்லப்படுது. இது சருமத்த சூரியனின் புற ஊதா கதிர்களின் நேரடி பாதிப்புல இருந்து பாதுகாத்து தோல் கருக்காம இருக்க உதவுது. தோல் கருப்பத தடுக்குறது மட்டும் இல்லாம தோல் புற்று நோய், தோல் சுருக்கம் போன்ற பாதிப்புகள்ல இருந்தும் பாதுகாக்குது..

இந்தியால தற்சமயம் Sun screen பயன்பாடு தொடர் விளம்பரங்கள் காரணமா உயர்ந்து காணப்படுது. தரவுகள் படி, 2023ல இதன் சந்தை மதிப்பு 879 மில்லியன் டாலரா இருந்த நிலையில, 2030ஆம் ஆண்டு Sun screen-ஓட சந்தை மதிப்பு 1256 மில்லியன் டாலரா உயரும்னு கணக்கிடப்பட்டிருக்கு. வெயில் இப்படி இருக்கே.. முகத்துக்கு Sun screen அப்ளை பண்ணியிருக்கீங்களான்னு பரஸ்பரம் விசாரித்துக்கொள்ளும் அளவுக்கு அதன் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருது.

இந்த நிலையில தான் Sun screen-னால புற்றுநோய் வரும்னு வெளியாகும் தகவல்கள் அத யூஸ் பண்றவங்க மத்தியில அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு.. oxybenzone மற்றும் avobenzone போன்ற ரசாயனம் கலக்கப்பட்ட சில Sun screen-கள தோல்ல பூசும்போது அது தோலால உறிஞ்சப்பட்டு புற்று நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள ஏற்படுத்த வாய்ப்பிருப்பதா தகவல்கள் தெரிவிக்குது..

பொதுவா சன் ஸ்க்ரீன்ல Mineral Sunscreen மற்றும் Chemical Sunscreen-ன்னு ரெண்டு வகை இருப்பதா சொல்லப்படுது. இதுல முதல் வகை க்ரீம்ல zinc oxide, titanium dioxide போன்றவை இருக்கு. இவை தோல புற ஊதாக்கதிர்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாக்குது. இந்த Sunscreen பூசப்பட்ட இடத்துல வெள்ளையான படிவுகள சில சமயங்கள்ல படிவத பார்க்கமுடியும்.

ரசாயன சன் ஸ்க்ரீன பொறுத்தவரைக்கும் அதுல octocrylene, oxybenzone, avobenzone, octisalate போன்ற பொருட்கள் இருப்பதா சொல்றாங்க. இவை புற ஊதாக்கதிர்கள ஸ்பாஞ்ச் போல அதிகம் உறிஞ்சி தோல்களை பாதுக்காப்பதா சொல்லப்படுது. இந்த நிலையில தான் கெமிக்கல் சன்ஸ்கிரீன்-ல கலந்திருப்பதா சொன்ன பொருட்கள் தோல்கள் வழியா ரத்தத்தால உறிஞ்சப்படுவதாகவும், இது ஹான்மோன்கள்ல கோளாற ஏற்படுத்துவதாகவும், கேன்சர் செல்களை உருவாக்கும் ஆபத்து நிறைந்ததாகவும், இனப்பெருக்க நலனைக் கூட பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுது..

இப்படி பயமுறுத்தக்கூடிய தகவல்கள் பல உலா வரும் நிலையில, இதுக்கு சில தோல் மருத்துவர்கள் அதிரடியா மறுப்பு தெரிவிக்குறாங்க. மேலும் சன்ஸ்கிரீனால இதுபோன்ற பாதிப்புகள்லாம் ஏற்படாதுன்னும் அடிச்சு சொல்றாங்க

அதாவது சில Sunscreen-ல உள்ள மூலப்பொருட்கள் தோல் மூலமா உறிஞ்சப்பட்டாலும் அது புற்றுநோயையோ, சிறுநீரக பாதிப்பையோ ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்து நிறைந்ததுன்னு எந்த ஆய்வுலயும் நிரூபிக்கப்படலன்னு விளக்கம் அளிக்கப்படுது. அப்படி ஒருவேளை சந்தேகம் இருந்தா அவங்க Chemical Sunscreen-அ தவிர்த்துட்டு Mineral Sunscreen-அ பயன்படுத்தலாம்னு அறிவுறுத்தப்படுது..

இன்னொரு பக்கம், ஒருவேளை Sunscreen-ன் ஏதாவது ஒரு மூலப்பொருள் ரத்தத்துல கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை எந்த ஒரு உறுப்புக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் மிக்கவை இல்லன்னு சொல்லப்படுது. Sunscreen-னு இல்லாம எந்த ஒரு க்ரீமை தோல்ல பூசிக்கிட்டாலும் அது கொஞ்சமா ரத்தத்தால உறிஞ்சப்படும்னும், ஆனா அது அளவுல மிகக்குறைவு என்பதால அது உடல் நலன்-ல எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதுன்னும் சொல்லப்படுது. ஆக, Chemical Sunscreen-அ நீங்க தோல்ல பூசுனா கூட அதனால எந்த பாதிப்பும் ஏற்படாதுன்னு மருத்துவர்கள் சொல்றாங்க..

மொத்தத்துல Sun screen-னால புற்று நோயை உருவாகும் வாய்ப்பிருப்பதா பரவும் தகவல்கள் உண்மை இல்லன்னும், எந்த வகையான Sun screen வேணுமோ அதை தேவைப்படும் நபர்கள் தாராளமா பயன்படுத்தலாம்னும் மருத்துவர்களால விளக்கமளிக்கப்படுது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
13 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved