Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது.
அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 50 பேருடன் பயணித்துள்ளது. அப்போது ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற பகுதிக்கு மேலே பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.
உடனடியாக விமானத்தை தேடும் பணியை ரஷிய பேரிடர் அமைச்சகம் தொடங்கிய நிலையில் விமானம ரேடாரில் இருந்து மறைந்த பகுதியில் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தைண்டாவுக்கு 15 கி.மீ தொலைவில் உள்ள சரிவான மலைப்பகுதியில் இருந்து அடர்ந்த கரும்புகை வெளியான நிலையில் அதனை சோதனையிட்டபோது விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதை ரஷ்யாவின் அவசரகால அமைச்சக தரப்பு உறுதி செய்துள்ளது.
இதையடுத்து முதற்கட்ட தகவல்களின்படி, காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு குழுவினர் கண்டுபிடித்ததாகவும், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved