Also Watch
Read this
By: Web Team

தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் ராஜ் கிரண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், துயர சம்பவம் “மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தியதாகவும், என்னதான் ஆறுதல் படுத்தப்பார்த்தாலும் மனம் தவிப்பதை, தன்னால் நிறுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இறைவா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஆறுதல் படுத்தி இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல், தம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு இறைவா ” என பதிவிட்டுள்ளார்.