ஆயிரத்தில் ஒருவன் 2 : புதுப்பேட்டை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்றும் ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாவது தன் கையில் இல்லை என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.தற்போது வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் உருவாக்குவது எளிமையானது தான் என தெரிவித்த செல்வராகவன், ஆனால் படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என்றார். இதுபோக 7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் திரைப்படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். Related Link “எல்ஐகே” படத்தின் ‘எனக்கென யாருமில்லையே பாடல்