Also Watch
Read this
By: Web Team

பராசக்தி திரைப்படத்தில் தான் இணைந்தது குறித்து நடிகர் ரவி மோகன் மனம் திறந்து பேசியுள்ளார். திரைப்படத்திற்கான முழு கதையையும் இயக்குநர் சுதா கொங்கரா தன்னிடம் தெரிவித்தபோது, தான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என அவர் நினைத்ததாக ரவி மோகன் கூறினார். பின்னர் கதை பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டதும், இது போன்ற முடிவை எடுக்க தனி தைரியம் வேண்டும் என சுதா கொங்கரா பாராட்டியதாகவும் அவர் கூறினார். பராசக்தியில் நடிகர் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved