Also Watch
Read this
By: Admin News Tamil

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்
பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர் மற்றும் சங்கராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பகவுண்டரின் மகன் ஆட்டோ ஓட்டுநர்
ராமு என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved