news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தூக்கிய நபர்!
tv

Also Watch

tv

Read this

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து குழந்தையை தூக்கிய நபர்!

வடசென்னையில் துணிகரம்

1

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
crime

வடசென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு திடீர் நகர் மூன்றாவது தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் ஞானேஸ்வரன், நிஷா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது.

நேற்றிரவு இவர்கள் தங்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது நள்ளிரவு ஒரு மணி அளவில் இளைஞர் ஒருவர் வீடு புகுந்து பத்து மாத பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு திருடன் முயற்சித்துள்ளார். குழந்தையை தொட்டவுடன் குழந்தை சிணுங்கி தனது காலால் எட்டி உதைத்த போது அதை
குழந்தையின் தந்தையின் மீது பட்டதாக தெரிகிறது. 

உடனே கண் விழித்த குழந்தையின் தந்தை திருடனை தள்ளிவிட்டு பிடிக்க முயற்சித்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட திருடன் வீட்டிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம்
என ஓடியுள்ளார். திருடனை சிறிது தூரம் திருடனை துரத்தி சென்ற ஞானேஸ்வரன் வீடு திரும்பியுள்ளார். 

இந்த திருட்டு சம்பவத்துக்கு காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தினால் கதவுகளை திறந்து வைத்து உறங்கியபோது இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இதேபோல் தெருவில் வேறு ஒரு வீட்டிற்குள் புக முயற்சி செய்துள்ளான். காது கேளாத வாய் பேச முடியாத இந்த தம்பதிகளின் குழந்தையை திருடன் முயற்சித்த நிலையில் குழந்தையின் கால் தந்தை நானேஸ்வரன் மீது பட்டதால் கண்விழித்து தனது குழந்தையை ஞானேஸ்வரன் காப்பாற்றியுள்ளார்.

இரவில் போலீசார் போதிய அளவுக்கு ரோந்து பணியில் இல்லாதது இது போன்ற திருட்டு சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுக
போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.20,000-க்கு மடிக்க கூடிய விவோ ஸ்மார்ட்ஃபோன்

0
50 mins agoshare
vivo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved