Also Watch
Read this
By: Web Team

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 110 பேரில் 104 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 110 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.