Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் தாமிரபரணி போக்குவரத்து பணிமனையில் 18 ஆயிரம் லிட்டர் டீசல் மாயமான புகாரில். கிளை மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தாமிரபரணி பணிமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற தணிக்கை குழு அதிகாரிகள், பேருந்திற்கு வழங்கப்படும் டீசல் கணக்கினை ஆய்வு செய்தனர்.
அப்போது, 18 ஆயிரம் லிட்டர் டீசல் இருப்பை குறைத்து கணக்கு எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக, கிளை மேலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேரை போக்குவரத்த கழக உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.
மேலும், பணிமனையில் இருந்து டீசல் திருடப்பட்டதா? அல்லது பேருந்துகள் கூடுதல் மைலேஜ் காட்டுவதற்காக தவறாக கண்க்கு எழுதப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved