Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு பெண்ணுக்காக, போதை இளைஞர்கள் மூன்று பேர் தகராறு செய்த நிலையில், ஒரு இளைஞரை மற்றொரு பெண் கடுமையாக தாக்கி கடித்ததால் அந்த பகுதியே களேபரமானது.தங்களுடைய மனைவி என போட்டி போட்ட மூவரில் ஒருவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். மற்ற இருவரும் அப்பெண்ணை அழைத்து செல்ல முயன்றபோது, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஓரமாக அமர வைத்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை தாக்கிய இளைஞருக்கு அறிவுரை கூறிய ஒரு பெண் போலீசார் கண்முன்னே, திடீரென அவரை சரமாரியாக அடித்தார். மூன்று பேருமே மதுபோதையில் இருந்ததால், பெண்ணின் உண்மையான கணவர் யார் என கண்டறிய முடியாத போலீசார் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர்.