Also Watch
Read this
By: Web Team

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 733 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தல் குறித்து தகவல் அறிந்து, விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள், சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பிய இளைஞரை சோதனை செய்ததில், அவர் 3 தங்க உருளைகளை விழுங்கி கடத்தியது தெரிய வந்தது.