news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகைக்காக 84 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்
tv

Also Watch

tv

Read this

நகைக்காக 84 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

சிவகாசி, விருதுநகர்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீண்ட நேரமாக பூட்டிக் கிடந்த 84 வயது மூதாட்டியின் வீட்டுக்கதவு. கதவை உடைத்து உள்ளே சென்ற கிராம மக்கள். நடுவீட்டில் சடலமாக கிடந்த மூதாட்டி. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி தகவல். மூதாட்டியின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக வெளியான ரிப்போர்ட். சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீஸ். போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல ஊர்கள் வழியாக பேருந்தில் பயணித்ததாக வாக்குமூலம். 84 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

* மூதாட்டியின் வீடு நீண்ட நேரமாக பூட்டிக் கிடந்ததால் அதிர்ச்சி
* வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கிராம மக்கள்
* நடுவீட்டில் சடலமாக கிடந்த மூதாட்டி தாயாராம்மாள்


அதிகாலை நேரம், கிராம மக்கள் விவசாய வேலைக்கு போய்ட்டு இருந்தாங்க. அப்ப தாயாரம்மாள்ங்குற மூதாட்டியோட வீட்டுக்கதவு பூட்டிக் கிடந்துருக்கு. இதபாத்த உறவினர்கள் கதவ தட்டிப் பாத்திருக்காங்க. அப்ப வீட்டுக்குள்ள இருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கல. இதனால பதறிப்போன நபர்கள் கதவ உடைச்சுட்டு வீட்டுக்குள்ள போய்ருக்காங்க. அப்ப நடுவீட்ல மூதாட்டி, உயிரிழந்து கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு கிராம மக்கள் எல்லாரும் மூதாட்டியோட வீட்டுக்கு ஓடி வந்து பார்த்திருக்காங்க. அப்ப மூதாட்டியோட கழுத்துல இருந்த செயின், காதுல போட்டுருந்த கம்மல், கையில போட்டுருந்த மோதிரம்ன்னு எல்லாமே காணாம போய்ருக்கு. அதே மாதிரி மூதாட்டியோட ஃபோனும் காணாம போய்ருக்கு. இதனால மூதாட்டியோட கொலையில ஏதோ மர்மம் ஒழிஞ்சுருக்குன்னு நினைச்ச கிராம மக்கள், போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இதகேட்டு உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. அப்ப பக்கத்து வீட்டுல உள்ள ஜமுனா-ங்குற மற்றொரு மூதாட்டி தலைமறைவானது தெரியவந்துருக்கு.

* போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
* கழுத்தில் காயங்கள் இருந்ததாக வெளியான ரிப்போர்ட்
* செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்து விசாரித்த போலீஸ்


ஜமுனாவ பத்தி அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்ட விசாரிச்சுருக்காங்க போலீஸ். அப்ப ஜமுனா நேத்து வர வீட்ல தான் இருந்தா, திடீர்ன்னு அவ எங்க போனான்னு தெரியலன்னு சொல்லிருக்காங்க. இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல தாயாரம்மாள் கழுத்துல காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்துச்சு. இதனால இத கொலைன்னு கன்பார்ம் பண்ண போலீஸ் அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து பாத்துருக்காங்க. அப்ப நள்ளிரவுல ஜமுனா நடந்து போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. அடுத்து கிராம மக்கள் கிட்ட இருந்து மூதாட்டி ஜமுனாவோட செல்போன் நம்பர வாங்குன போலீஸ், அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அதுல செல்போன் சிக்னல் கோயம்பத்தூர்ல காட்டிருக்கு. இதனால நேரா சிக்னல் காட்டுன இடத்துக்கு போன போலீஸ், அங்கொரு வீட்ல பதுங்கியிருந்த ஜமுனாவ பிடிச்சு விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வந்தாங்க. அதுல தான் தாயாரம்மாள் ஏன் கொலை செய்யப்பட்டாங்க, என்ன காரணம் அப்படிங்குற எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது.

* 10 வருடங்களுக்கு முன் தாயாரம்மாளின் வீட்டின் அருகே குடியிருந்த ஜமுனா
* தற்போது மகளுடன் வசித்து வரும் மூதாட்டி ஜமுனா
* அடிக்கடி தாயாரம்மாளின் வீட்டிற்கு சென்ற ஜமுனா


விருதுநகர்ல உள்ள சிவகாசி, திருமலைநாயக்கர் கிராமத்த சேந்தவங்க 84 வயசான தாயாரம்மாள். ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவங்க தன்னோட பசங்களுக்கு திருமணம் பண்ணி வச்சுட்டு, அங்குள்ள வீட்ல தனியா வசிச்சுட்டு இருந்துருக்காங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி இவங்க வீட்டுப் பக்கத்துல ஜமுனாங்குற மூதாட்டி தங்கி இருந்துருக்காங்க. தாயாரம்மாள் தனியா இருந்ததால, பகல் நேரத்துல அவங்களுக்கு ஜமுனா உதவியா இருந்துருக்காங்க. ஜமுனா இப்ப, தனது மகள் கூட கோயம்பத்தூர்ல வசிச்சுட்டு இருக்குறதா கூறப்படுது. இதுக்கிடையில அடிக்கடி தாயாரம்மாள பாக்க திருமலை நாயக்கர் கிராமத்துக்கு வர்ற ஜமுனா, அதே பகுதியில உள்ள ஒரு வீட்ட வாடகைக்கும் எடுத்துருக்காங்க. மூதாட்டிய பாக்க வர்றப்ப, தன் குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்குன்னு சொல்லி தாயாரம்மாள் கிட்ட ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய்ன்னு செலவுக்கும் வாங்கிட்டு போவாங்கன்னு கூறப்படுது.

* நகைக்காக மூதாட்டியை முடிக்க திட்டம் போட்ட ஜமுனா
* தாயாரம்மாளின் முகத்தை தலையணையால் அழுத்தி...
* ஜமுனாவை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்


சம்பவத்தன்னைக்கு நைட்டு தாயாரம்மாளோட வீட்டுக்கு போய்ருக்காங்க ஜமுனா. அப்ப அவங்க கழுத்துல இருந்த நகைகள் எல்லாத்தையும் திருடிட்டு, தன்னோட கடன அடைக்க முடிவு பண்ணிருக்காங்க. அதுக்காக மூதாட்டிக்கு நைட்டு உணவ சமைச்சு கொடுத்த ஜமுனா, தன்னோட வீட்டுக்கு போகாம அவங்க கூடவே நைட்டு தங்கிருக்காங்க. அடுத்து மூதாட்டி நல்லா தூங்குனதா தெரிஞ்சுக்கிட்ட ஜமுனா, கழுத்த நெரிச்சும் தலையணைய வச்சு மூதாட்டியோட முகத்துல அமுக்கியும் கொன்னுருக்காங்க. அதுக்கடுத்து அவங்க கழுத்து, கை, கால்ல போட்ருந்த நகைய திருடுன ஜமுனா, செல்போனையும் எடுத்துட்டு அங்கருந்து கோயம்புத்தூருக்கு தப்பிச்சு போக முடிவு பண்ணிருக்காங்க. போலீஸ் கிட்ட சிக்காம இருக்க, நேரா கோயம்புத்தூருக்கு போற பஸ்ல ஏறாம, கோவில்பட்டி, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்புத்தூர் மற்ற ஊர்கள் வழியா, சுத்திட்டு போய்ருக்காங்க. போற வழியில தாயாரம்மாளோட செல்போனையும் தூக்கி வீசிருக்காங்க ஜமுனா. ஆனா கிராம மக்கள் கொடுத்த தகவல வச்சும், செல்போன் நம்பர வச்சும் ஜமுனா தான் குற்றவாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ் ஜமுனாவ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
போதையில் கலங்கிய கபாலம்

போதையில் கலங்கிய கபாலம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
21 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved