ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மூச்சை முட்டும் மது போதையில் கண்ணில் பட்ட பைக்குகளை எல்லாம் இடித்து தள்ளி, களேபரம் செய்து 2 பேரின் காலை உடைத்த நபர், கடைசியாக பழக்கடைக்குள் காரை விட்டு செமர்த்தியாக வாங்கிக் கட்டிய நிகழ்வு அரங்கேறியது. கூட வந்த நபர் மீதே காரை ஏற்றி கொல்ல பார்த்த குடிகார லூட்டி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. * காரை ரிவர்ஸ் எடுத்து மாறி மாறி மோதி கெத்து காட்டிய குடிகார நபர்* டாஸ்மாக் பாரில் ஃபுல்லாக குடித்து விட்டு காரை ஓட்டிய நாகவடிவேல் * சாலையில் வழி விட சொன்னதற்காக பைக் மீது காரால் ஏற்றிய கொடூரம்என்னமோ, சினிமாவில் வரும் ஆக்சன் சீன் போல, காரை ரிவர்ஸ் எடுத்து மாறி மாறி மோதி கெத்து காட்டி விவகாரமாக சிக்கிக் கொண்ட குடிகார கொம்பன் இவர்... ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாறு என்ற இடத்தில் அரசு டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது. இந்த பாரில், சிங்க புலியாபட்டி கிராமத்தை சேர்ந்த 35 வயதான நாகவடிவேல் என்பவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். தலைக்கு ஏறிய மது போதையில் நிற்க கூட தெம்பு இல்லாத தள்ளாட்ட நிலைமையில், காரை எடுத்து ஓட்டி வந்திருக்கிறார் நாகவடிவேல்.* காரை ரிவர்ஸ் எடுத்து மோத முயன்ற நிலையில், மீண்டும் அட்டூழியம்* கண்ணில் பட்ட பைக்குகளை வெறிபிடித்தது போல இடித்து தள்ளினார்டாஸ்மாக் பாரில் இருந்து, கமுதி நோக்கி வரும் சாலை, மிகவும் குறுகிய சாலை என்ற நிலையில், நாகவடிவேல் காருக்கு பின்னாடியே அலெக்ஸ் பாண்டியன் என்பவர் பைக்கில் வந்திருக்கிறார். அப்போது, பைக்கிற்கு வழி விட சொல்லி அலெக்ஸ் பாண்டியன் ஹாரன் அடிக்க, நடுவழியில் காரை நிறுத்தி இருக்கிறார் நாகவடிவேல். உடனே நாகவடிவேலுவுடன் காரில் இருந்த கூட்டாளி ஒருவர் கீழே இறங்கிச் சென்று பைக்கில் இருந்த சாவியை பறித்து பிரச்சனை செய்ய, நாக வடிவேலு காரை ரிவர்ஸில் எடுத்து பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் பாண்டியன் காயம் அடைந்த நிலையில், அங்கிருந்து நாகவடிவேல் தப்பி ஓடி வந்திருக்கிறார்.கமுதி பேருந்து நிலையம் அருகே வந்த போது, கண்ணில் பட்ட பைக்குகளை எல்லாம் வெறி பிடித்தது போல இடித்து தள்ள தொடங்கினார் நாக வடிவேல். தன்னிடம் பிரச்சனை செய்த பைக் தான் நிற்கிறது என நினைத்துக் கொண்டு மது போதையில் கபாலம் கலங்கி, நாக வடிவேலு இதற்கு மேல் செய்த அட்ராசிட்டி தான் ஆபத்தின் உச்சம். குடி வெறியில் கூட வந்த கூட்டாளியவே கார் ஏற்றி காலை உடைத்து போட்டது அங்கு நின்றவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.* குடி வெறியில் கூட வந்த கூட்டாளியவே கார் ஏற்றி காலை உடைத்த கொடூரம்* பேருந்து நிலையம் எதிரே இருந்த மெக்கானிக் ஷாப் மீது மோதி கண்டமாக்கினார்பேருந்து நிலையம் எதிரே இருந்த மெக்கானிக் ஷாப் மீது மோதி பைக்குகளை கண்டமாக்கிய நாகவடிவேல், போலீஸ் நிற்கும் போதே மறுபடியும் காரை ரிவர்ஸ் எடுத்து ஓரமாக நின்ற கார் மீது மோதினார். அதோடு நிற்காமல் மீண்டும் காரை ரிவர்ஸ் எடுத்து அருகே இருந்த பழக்கடைக்குள் பாய்ந்த நிலையில், தர்பூசணி பழக்கூடை எல்லாம் பறந்து தெறித்தன. பழக்கடையில் மோதியவாறு காரை எடுக்க முடியாத நிலையில், காருக்குள் இருந்த நாகவடிவேலுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர்.* மீண்டும் காரை ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு பழக்கடைக்குள் பாய்ந்த நாகவடிவேல்* காருக்குள் இருந்த நாகவடிவேலுவை சூழ்ந்து கொண்டு அடிக்க பாய்ந்ததால் பரபரப்புஆக்ரோஷத்தின் உச்சத்திற்கே சென்ற மக்கள், கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நாகவடிவேலுவை கீழே இறக்க முயன்றனர். இவ்வளவு செய்து விட்டும் கூட காரை விட்டு இறங்க மறுத்த நாக வடிவேல், ஆபாசமாக திமிர்த்தனம் பேச, வெளியே நின்றவர்களுக்கு டென்ஷன் உச்சமானது. காருக்குள் இருந்த வரைக்கும் ஆபாச வாய் பேசிய நாக வடிவேல், கீழே இறங்கியதும் போதையில் மல்லாக்க படுத்துக் கொண்டு நாடகத்தை போட தொடங்கினார். சிக்கினால் சிதைத்து விடுவார்கள் என யோசித்து, எழுந்திருக்கவே முடியாதது போல நாகவடிவேல் போட்ட நாடகம் அம்மாடி ரகம் தான். பொது மக்களுக்கும், குடிகார லூட்டி நாகவடிவேலுவுக்கும் இடையே ஒரே ஒரு போலீஸ் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்டது பரிதாபமாக இருந்தது.* கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கி காருக்குள் இருந்த குடிகார நபரை தூக்கினர்* போதை கண்ணை மறைத்து இருந்ததால் நாகவடிவேலுவுக்கு நடந்தது ஞாபகம் இருக்காதுஇதனையடுத்து, நாக வடிவேலுவின் கார் மோதி கால் முறிந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த 2 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸ், நாகவடிவேலுவை சிறப்பாக கவனிக்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குடி போதை ஒரு மனிதனை எந்த அளவுக்கு மோசமாக மாற்றும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். கார் சேதமாகி, 2 பேரின் கால் உடைந்து காவல் நிலையத்தில் கை கட்டி நிற்க வைத்திருக்கிறது அந்த மது போதை. போதை கண்ணை மறைத்து இருந்ததால் நாகவடிவேலுவுக்கு நடந்தது எதுவும் தற்போது ஞாபகம் இருந்திருக்காது. மதுபோதை தெளிந்ததும் தான் சிறப்பான ட்ரீட்மெண்ட் கிடைக்கும் என நம்பலாம். Related Link 3 மனைவிகள், குடும்பமாக சேர்ந்து கேடி வேலை