Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 7 வயது சிறுமியின் கழுத்தில் கத்தரிக்கோலை வைத்து கொலை செய்து விடுவதாக ஒருவன் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
மேலகண்டை கிராமத்தை சேர்ந்த தமிழரசி, தனது மகள் யாஷிகாவை சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், மணிகண்டன் என்பவன் திடீரென மிரட்டியதால் சிறுமி பயத்தில் அலறினார்.
ஒருகட்டத்தில் சிறுமியை மணிகண்டன் விடுவித்த பிறகு, அங்கிருந்தவர்கள் அவனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணிகண்டன் கஞ்சா அல்லது மதுபோதையில் இருந்தானா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவனா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.