news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய கரடி
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய கரடி

சங்கரபாண்டியபுரம், நெல்லை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கரடி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே களக்காடு முண்டந்துறை துறை புலிகள் காப்ப மலையடிவார பகுதியான விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்பு , கோட்டை விளைப்பட்டி சங்கரபாண்டியபுரம், மற்றும் கடையம் வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கடையம் வனச்சரகம், ஆம்பூர் பீட் வெளிமண்டல பகுதியான சங்கரபாண்டியபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று நள்ளிரவில் உலா வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கரடியைப் பிடிப்பதற்காகக் கூண்டு அமைத்து, தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் அந்தப் பகுதிக்குள் வந்த
சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டிற்குள் நுழைந்து சிக்கியது.

கரடி கூண்டில் பிடிபட்ட தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனைத் தொடர்ந்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர்
முன்னிலையில், வனக் கால்நடை மருத்துவர் மூலம் பிடிபட்ட கரடிக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து கரடி ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து முண்டந்துறை வனச்சரகம், கொடமாடி பீட் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த கரடியை விரைந்து பிடித்த வனத்துறையினருக்குப் பொதுமக்கள் தங்களது நன்றி தெரிவித்தனர்.

Related Link
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர் கூட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர் கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘முதல்வர்’ என்ற வார்த்தை திடீர் நீக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை..

1
1 hr 26 mins agoshare
Payilagambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau