Also Watch
Read this
By: Manigandan Raja

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே மோதல் ஆர்ப்பாக்கம் பகுதியில் இரு தரப்பினருக்குள்ளே மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களம் போலீசார் உடனடியாக போலீசார் குவித்து இரு தரப்பு முதலில் தடுத்து நிறுத்தி காயம் அடைந்த ஒரு தரப்பினரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மற்றொரு தரப்பினர் திருவண்ணாமலையில் உள்ள அவர்களது ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு முன் திருவண்ணாமலையில் அடியாட்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த அவர்கள் மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் நின்றவுடன் ஆம்புலன்ஸ் உள்ளேயே சென்று ஒருவர் ஒருவர் தாக்கிக் கொண்டதால் அரசு மருத்துவமனையே நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தக்களறியாக உள்ளதாக அங்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர் இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த சம்பவம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் என ஆங்காங்கே நடைபெற்ற நிலையில் தற்போது மருத்துவமனைக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் இந்த ஆட்சியில் பெண்களுக்கு பொதுமக்களுக்கு நோயாளிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.