news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சாதனை
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சாதனை

திருவாரூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நெல் கொள்முதல் நிலையத்தில் சாதனை

திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும் 30 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபட ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குருவை சம்பா தாளடி என மூன்று போகம் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.

விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம். தமிழகத்தில் காரீப் பருவமானது, கடந்த O1.09.2025 முதல் 31.08.2026 வரை ஆகும்.

இந்த நிலையில் இதுவரை காரிப் பருவம் முடிவடையும் தருவாயில், நடந்து முடிந்த 2025 - 26 குறுவை சாகுபடியில், 2,85,730 மெட்ரிக் டன், சம்பா மற்றும் தாளடியில் 5, 65,286 மெட்ரிக் டன், கோடை குருவை சாகுபடியில் இதுவரை 56,014 மெட்ரிக் டன் உட்பட ரூ. 9 லட்சத்து, 7 ஆயிரத்து 30 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024-25ம் ஆண்டில் 8 லட்சத்து 4 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லும்,, 2023 - 24 ம் நிதியாண்டில் 8 லட்சத்து 56 ஆயிரம் மெட்ரிக் டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் நிகழாண்டு நெல் கொள்முதல் என்பது, எந்த ஆண்டும் இல்லாத வகையில் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 1 லட்சத்து 19, 164 விவசாயிகளுக்கு ரூ,2 189 கோடியே 61 லட்சம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதிக நெல் கொள்முதலை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க ஆறு மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகளில் 60 ஆயிரத்து 1031 மெட்ரிக் டன் நெல்லும், மேற்கூரை அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகளில் 43,728 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும் சேமிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர 13 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில், ஒரு லட்சத்து 41,23 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Link
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய கரடி

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய கரடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘முதல்வர்’ என்ற வார்த்தை திடீர் நீக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை..

1
1 hr 25 mins agoshare
Payilagambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau