Also Watch
Read this
By: Manigandan Raja

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்க கூடிய வால்பாறையின் சிரபுஞ்சி சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியை காண்பதற்காக குவிந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியான சுற்றுலா என கருதும் சிறப்பு வாய்ந்த சின்ன கல்லார் பகுதியாகும்.
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் நேற்று சின்னக் கல்லார் பகுதியில் 123 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள காரணத்தினால் அப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடும் காட்சியைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் போட்டோ செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

இருப்பினும் அப்பகுதியில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் வனத்துறை அவர்களை தீவிர கட்டுப்பாட்டில் ஈடுபட்டு அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.