Also Watch
Read this
By: Manigandan Raja

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கிழக்குதெருவை சேர்ந்தவர் பாலமுருகன் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவியும் மூன்று மகள்களும் உள்ள நிலையில்
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை இவரது வீட்டிற்கு வெறும் 800 ரூபாய் அல்லது 900 ரூபாய்க்கு கீழ் வரையிலேயே மின் கட்டணம் வந்துள்ளது இதையடுத்து இவர் தவணை முறையில் ஒரு ஏசி வாங்கி தனது வீட்டில் பொருத்தியுள்ளார் இதையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு ஏப்ரல் மாதம் 2500 ரூபாய் என்று மின்கட்டணம் வந்த நிலையில்.
இந்த முறை மின் கட்டணமாக 17 ஆயிரத்து 59 ரூபாய் வந்துள்ளது இந்த 17 ஆயிரத்து 59 ரூபாய் மின் கட்டணம் கட்ட கூறி ரசீது வந்ததை கண்ட பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்
மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் வரை கிடைக்கும் கூலி தொழிலாளி தனது வீட்டின் மின் கட்டணமாக 17,059 ரூபாய் வந்ததை கண்டு செய்வதறியாமல் திகைத்து இது குறித்து ஆண்டிபட்டி துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கண்டமனூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் உதவி பொறியாளரிடம் விளக்கம் கேட்டார்.
ஆனால் அவருக்கு எவ்வித முறையான பதிலும் கூறாமல் அலைக்கழித்து வந்த மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் அங்குள்ள அலுவலர்கள் நீங்கள் மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குள் முழுமையான மின் கட்டணமான 17 ஆயிரத்து 59 ரூபாய் கட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் உங்களது வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனால் வேதனை அடைந்த பாலமுருகன் மீண்டும் மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்ட நிலையில் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்ற அதிகாரிகள் தங்களது தரப்பில் தவறில்லை என்றும் நீங்கள் இந்த தொகையை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து இவ்வளவு அதிகமாக வந்த மின்சார கட்டணத்தை குறைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கூலி தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.