Also Watch
Read this
By: Manigandan Raja

நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளான சோழசிராமணி, ஜேடர்பாளையம், கொந்தளம், வெங்கரை, பொத்தனுார், பரமத்தி வேலுார், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனுார், ஒருவந்துார் ஆகிய பகுதிகளில், அவ்வப்போது மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
டூவீலரில் சென்று சாக்குகளில் மூட்டை மூட்டையாக திருடி சென்று ஒரு இடத்தில் அடுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். போலீசாரும், அவ்வப்போது சோதனை நடத்தி மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கைது செய்தும், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இருந்தும், மணல் திருட்டை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இந்நிலையில், மோகனுார் அடுத்த கீழ் பாலப்பட்டி காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடக்கிறதா என்பது குறித்து, மோகனூர் தாசில்தார் கோவிந்தசாமி, காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் மோகனுார் – பரமத்தி வேலுார் சாலையில் கீழ் பாலப்பட்டி முதல், காவிரி ஆறு வரை, ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் மணல் திருட்டு நடக்கவில்லை என்பதும், திருட்டுத்தனமாக மணல் மூட்டைகளை அடுக்கியும், காலி சாக்குகள் இல்லை என்பதும் தெரியவந்தது. 20ல் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, 500க்கும் மேற்பட்ட சாக்குகள் சுருட்டி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.