Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் மேகதாது அணை தடுப்போம் காவிரியை காப்போம் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை தடுக்க வலியுறுத்தி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி பில்லிகுண்டில் தொடங்கி 4 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு சுற்று பயணம் மேற்கொண்டு.
காவிரி சங்கமிக்கும் பூம்புகார் தருமகுளத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் கூட்டத்திற்கு பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை ஏற்று வரவேற்றார் பாமக மாநில பொது செயலாளர் வடிவேல் ராவணன் , எம்.எல்.ஏ.க்கள் வைத்தி , சிவக்குமார் மாவட்டத் தலைவர் கோசு மணி உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலய மணி பசுமை தாயகம் செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று மேகதாது அணை தடுக்க வலியுறுத்தி பேசினர் முன்னதாக கலந்துக் கொண்ட அன்பு மணிக்கு விவசாயிகள் கட்சியினர் ஏர் கலப்பை வழங்கி வரவேற்றனர் தருமபுரம் ஆதீனம் மடம் திருபுவனம் கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் தருமபுரம் ஆதீனம் கல்லூரி செயலர் செல்வநாயகம் காவிரி பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரன்
வாழ்த்துரை வழங்கினர்.
விழிப்புணர்வு சுற்று பயணத்தை நிறைவு செய்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் :
கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு திட்ட மிட்டுள்ளது இதனை தடுக்க வலியுறுத்தி 4 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டு நிறைவாக பூம்புகாரில் நிறைவு செய்துள்ளோம்
மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் வரலாறு படைத்த படைக்கும் மண் பூம்புகார் மிக மிக முக்கிய பிரச்சனை காவிரியை தடுத்து மேகதாது அணை கட்ட கர்நாடகா துடித்து கொண்டு இருகின்றனர் தமிழ்நாட்டு மக்கள் மெத்தனமாக உள்ளனர்.
காவிரியை நம்பிதான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் அதனை தடுத்து நிறுத்திவிட்டால் விவசாயம் அவ்வளவுதான் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்பது உட்பட 23 தீர்மானங்களை நிறைவேற்றினோம்
காவிரி டெல்டா மண் புனிதமான மண் உணவளிக்கும் கடவுள் விவசாயிகள் கர்நாடகா சுயநலத்திற்காக சூழ்ச்சி செய்து அவர்கள் மட்டுமே நீரினை பயன்படுத்திட அணை கட்ட முயற்சிக்கிறார்களள் ஐந்தரை கோடி மக்கள் காவிரியை நம்பி உள்ளனர் 38 மாவட்டங்களில் 28 மாவட்ட மக்கள் காவிரியை நம்பி உள்ளனர் காவிரியை நம்பிதான் கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளது.
கர்நாடகா காவிரியை தடுத்தால் நம்மால் சும்மா இருக்க முடியுமா காவிரியை தடுத்து ஏற்கனவே கர்நாடகா 4 அணைகளை கட்டிவிட்டது மேகதாது அணை கட்டினால் 70 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாத கர்நாடகா சேமிக்கப்படும் மேகதாது அணை கட்டிவிட்டால் தமிழகத்தில் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காது.
விவசாயிகள் எலிக்கறி தின்ற சூழல் மீண்டும் உருவாகும் இதனை தடுக்க எல்லோரும் ஒன்றுசேர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் இது பாமக பிரச்சனை இல்லை தமிழ்நாட்டு பிரச்சனை தண்ணீர் இல்லை என்றால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர் காவிரி தண்ணீர் இல்லை என்றால் எந்த மாவட்டத்திற்கும் சோறு கிடைக்காது.
1974 ல் கர்நாடகா 6.8 லட்சம் ஏக்கர் விவசாயம் இருந்தவை தற்போது 21லட்சமாக உயர்ந்துள்ளது ஆனால் 29 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்த தமிழ்நாட்டில் 20 லட்சமாக குறைந்து விட்டது மேகதாது அணை கட்டிமுடித்தால் கர்னாடகாவில் விவசாயம் 30 லட்சமாக அதிகரிக்கும் அதே வேளையில் தமிழகத்தில் 10 லட்சமாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது கர்நாடகா தேவை 5 டி.எம்.சி ஆனால் அனை கட்டுவதன் மூலம் 70 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது
டி. கே. சிவக்குமார் மீண்டும் முதலமைச்சராக பொய்யை சொல்லி அவர் தொகுதியில் வரும் பகுதியில் அணைகட்ட முயற்சிக்கிறார் கர்நாடகாவில் அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்த வேகமாக காய் நகர்த்தி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர்.

வனவிலங்கை காக்க வேன்டிய வன விலங்கு வாரியம் கர்னாடாகாவில் நேர் எதிராத செயல்படுகிறது இங்கு எம்எல்ஏவை எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம் என யோசிக்கின்றனர் நம்ம கல்லணை உலகத்தில் மிக பழமையான பயன்பாட்டில் இருக்கின்ற நீர்திட்டம் இது நமக்கு பெருமை. கர்நாடகா அணை கட்ட யார் தைரியம் கொடுத்தார்கள் கல்லணை வரலாறை தெரிந்துக் கொண்டு மேகதாது அணை கட்டுவதை தடுக்க மக்களுக்கு
கோவம் வரவேண்டும் உணர்வோடு மக்கள் ஒன்றினைந்து ஜல்லிகட்டுக்கு போராடினோம். அணை கட்டினால் அனைவரும் பாதிப்போம் 1 சொட்டு தண்ணீர் கிடைக்காது விவசாயம் மறைந்த போகும் இந்த ஆண்டு மிக மோசமாக இருக்கும் குறுவை பொய்த்து விட்டது சம்பா இருக்குமா என தெரியவில்லை எல் நினோவால் பாதிப்பும் ஏற்பட உள்ளது
இறையான்மைக்கு எதிரா கர்னாடகா செயல்படுகிறது மத்திய அரசு கர்நாடகா மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆதரவாக இருக்கும் நடுவர் மன்றம் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காமல் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது
தமிழகம் உற்பத்தி பிரச்சனை தண்ணீர் இல்லை என்றால் உற்பத்தி குறைந்து தமிழகம் பின்தங்கிய மாநிலமாக மாறும் இந்த மண்ணை அழிக்க விடமாட்டோம் அடுத்த தலைமமுறைகக்கு புனிதமான இந்த மண்ணை விட்டு செல்வோம் முதல்வர் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
டெல்லியில் நாங்கள் போராட தயாராக உள்ளோம் கர்நாடகா அரசு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு மௌனம் காக்கிறது அந்தமானில் காட்டை அழித்து திட்டம் நிறைவேற்ற ராகுல் காந்தி எதிர்க்கிறார் மேகதாதுவில் காட்டை அழித்து அணை கட்டுவதை ராகுல் எதிர்க்க வேண்டும் அந்தமானுக்கு ஒரு நீதி கர்நாடகா ஒரு நீதியா
புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதமாகிறது பாசன வாய்க்கால் களை தூர்வார வேண்டும் இதையாவது செய்து தாருங்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுப்படி செய்ய வேண்டும்
நீர் மேலாண்மைக்கு திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் முக்கியத்துவம் தரவில்லை.
120 லட்சம் டன் நெல் உற்பத்தி நடக்கிறது. இதில் 40 லட்சம் டன் அரசு கொள்முதல் செய்கிறது. 18 லட்சம் டன் நெல்லை சேமிக்கும் வகையில் மட்டும் சேமிப்பு திறன் உள்ளது கொள்ளிடம் ஆற்றில் மணலை கொள்ளையடிக்க 10 ஆண்டுகளாக தடுப்பணை திட்டத்தை முழுமை செய்யவில்லை
சோசியல் மீடியா மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த மக்கள் அதே சோஷியல் மீடியா மூலம் அணை கட்டுவதை தடுக்க முடியாதா மேகதாது அணையை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்து விட்டால் அதன் பிறகு நமக்கு தெரிந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்போம் என்றார்.