Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கொடுமுடி புதிய பேருந்து நிலையம் பின்புறம், நத்தமேடு பகுதியில் புதர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காய்ந்த புற்கள் நிறைந்த இப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கிய நிலையில், கரும்புகை சூழ்ந்து அனல் காற்று வீசியது.
இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : மூதாட்டியின் பெயரில் 100 நாள் வேலை ஊதியத்தில் முறைகேடு..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved