Also Watch
Read this
By: Web Team

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மதுரையில் இருந்து தஞ்சை நோக்கி 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து புனல்குளம் பகுதியில் சென்றபோது,
எதிரே வந்த வாகனத்தின் LED விளக்கின் அதிக வெளிச்சத்தின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்து விழுந்தது.
இதில், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved