news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

அரியமங்கலம், திருச்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருச்சி

திருச்சி  அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ளூர் அரியமங்கலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கடந்த ஒரு வருடம் ஆக பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தரம் பிரித்து வைக்க இருந்த பழைய பிளாஸ்டிக்குகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள மளவென பரவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கும் , காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து
சாம்பலானது. அதிகாலையில் நடந்த இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

Related Link
சாலையில் நடந்து சென்ற ஒற்றைக் காட்டு யானை

சாலையில் நடந்து சென்ற ஒற்றைக் காட்டு யானை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

1
54 mins agoshare
திருச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau