news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 200 சவரன் நகைகளை மீட்டுத்தரக்கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

200 சவரன் நகைகளை மீட்டுத்தரக்கோரிக்கை

ஆரணி, திருவண்ணாமலை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சாலையில் மறியல்

ஆரணி அருகே கடன் சுமைக் காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் தங்கள் நகைகளை மீட்டு தரக்கோரி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடுகசாத்து ஊராட்சிக்குபட்ட சேர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் அஜித்குமார்(30) இவர் கடந்த 5 ஆண்டுகளாக வடுகசாத்து கிராமத்தில் சுமதி பொன் வெள்ளி அடகு கடை நடத்தி வருகின்றார்.

அஜித்குமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சுபாஷினி என்ற மனைவியும் 6 மாத கைக்குழந்தை உள்ளன. மேலும் இந்த அடகு கடையில் வடுகசாத்து அரையாளம் தச்சூர் சேர்ப்பாக்கம் உள்ளிட்ட
கிராமத்தில் உள்ள பொதுமக்கள் விவசாயம் சார்ந்த தொழிலுக்காக சுமார் 200சவரன் தங்க நகைகளை இந்த அடகு கடையில் வைத்துள்ளனர்.


இந்நிலையில் பொன் வெள்ளி அடகு நகை கடை உரிமையாளர் அஜித்குமார் தொழில் நஷ்டமானதால் கடன் சுமை ஏற்பட்டு விரக்தியில் இருந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஆரணி தாலுக்கா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஓப்படைத்தனர்.

இதனையடுத்து இன்று வடுகசாத்து கிராமத்தில் உள்ள சுமதி பொன் வெள்ளி அடகு கடையில் சுமார் 200சவரன் தங்க நகையை அடமானம் வைத்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு தங்களது நகையை திருப்பி தர அறிவுறுத்தினார்கள். பின்னர் ஆரணி தாலுக்கா போலீசார் சம்பவடத்திற்கு வந்து பொதுமக்களை சமரசம் செய்து உரிய ஆவணம் உள்ள பொதுமக்களின் நகையை மீட்ட தருவதாக உறுதியளித்தனர்.

Related Link
சரக்கு லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து

சரக்கு லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

1
3 mins agoshare
திருச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau