Also Watch
Read this
By: Manigandan Raja

"மீத சம்பளத்தை சிறுத்தை சிவா கேட்கவே இல்லை"

'கங்குவா' திரைப்படம் தொடர்பாக சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசிருக்கிறாரு. அதில், "கங்குவா படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் சுமார் 50 முதல் 60 சதவீகித தொகையை வழங்க முடியல. ஆனாலும், சிறுத்தை சிவா மீதமுள்ள சம்பளத்தை கேட்கவோ, அறிக்கை வெளியிடவோ, கடிதம் எழுதவோ, நீதிமன்றத்தை அணுகவோ இல்லை.
அதே மாதிரி, இசையமைப்பாளர் Devi Sri Prasad-ம் தனது சம்பளத்தில் 50 சதவீகித வரை தியாகம் செய்தாரு. அப்புறம், நடிகர் Suriya-வும் இந்தப் படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் உழைத்ததுடன், கோடிக்கணக்கான ரூபாயை இழந்தார்.." என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்திருக்கிறாரு.
CM VIJAY-ஐ பாராட்டிய இசையமைப்பாளர் தீனா :
வஞ்சி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் தீனா, "கடந்த ஆட்சியில் பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது இருக்கக்கூடிய முதல்வர் பெண்களுக்காகவே ஆட்சியை நடத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.
பெண்களை ஆண்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்பதே கிடையாது பெண்களே பெண்களை பாதுகாக்கலாம் என்று அவர்களுக்கு என தனி திட்டம் கொண்டு வந்த முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் , "ஒரு ஆண் தாயாக இருந்து மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசு நிலைத்து சிறப்போடு இருக்க வேண்டும்.." என்று இசையமைப்பாளர் தீனா தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறாரு.
மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த சசிகுமார் :

பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த 'குற்றப் பரம்பரை' திட்டம் தற்போது வெப் சீரிஸாக உருவாகிறதா தகவல் வெளியாகிருக்கு. இந்தப் பிரம்மாண்டமான முயற்சியை நடிகரும் இயக்குநருமான சசிகுமார் கையில் எடுக்கிறாரு. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்குகிறாரு நடிகர் சசிகுமார்.
சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த வெப் சீரிஸில், "அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் பார்வையாளர்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில், உண்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து இந்தத் தொடர் உருவாக்கப்படுகிறதா தகவல் வெளியாகிருக்கு. இந்த 'குற்றப் பரம்பரை' இயக்குநர் பாரதிராஜாவின் நீண்டநாள் கனவுத் திட்டமாக கருதப்பட்ட நிலையில் தற்போது அது நனவாகிருக்கிறது.
அன்றே 'உத்தம வில்லன்' ஓடாதுனு சொன்ன போஸ் :

நடிகர் கமல்ஹாசனுடன் பணியாற்றிய அனுபவங்களை இயக்குநர் லிங்குசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துருக்கிறாரு. அதில், 'உத்தம வில்லன்' படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் என்னை செட்டுக்கு அழைத்தார். ஆனால் நான், 'படப்பிடிப்புக்கு வர மாட்டேன். படம் முடிந்த பிறகு பார்த்து தேவையான திருத்தங்களை சொல்கிறேன்' என்றேன்.
அதற்கு அவரும் சம்மதித்தார். நானும் படம் பார்த்த பிறகு சில காட்சிகளில் மாற்றங்களும், எடிட்டிங் தொடர்பான ஆலோசனைகளும் கூறினேன். ஆனால் அதற்கு மறுநாளே பிரபலங்களுக்கான சிறப்பு திரையிடல் நடைபெற்றுருந்துச்சு.
அதன் பிறகு கமல் சார் என்னை தொடர்புகொண்டு, 'அனைவரும் படத்தை மிகவும் ரசிக்கிறார்கள். எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். படம் திரையரங்குகளில் ஓடவில்லை என்றாலும், நான் உங்களுடன் தம்பி போல இருப்பேன். நாமெல்லாம் சினிமாவில் இருக்கிறோம்; தொடர்ந்து படங்கள் செய்வோம்' என்று கூறினார். ஆனால் தயாரிப்பாளர் போஸ் மட்டும், 'இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய வெற்றி பெறாது' என்று அப்போதே கூறியிருந்தார்" என்று லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.
வெளியானது பாலன் தி பாய் திரைப்படத்தின் இறுதி வசூல் :

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் 'பாலன் தி பாய் திரைப்படம்' கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியாகிருந்துச்சு. முஹம்மத் ஜினான், பர்ஹானா, ஜீன் பால் லால் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததுனே சொல்லலாம்.
இந்த நிலையில், பாலன் - தி பாய் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகிருக்கு. அதன்படி, இந்த படம் 32 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகிருக்கு.
'அருள்வான்' படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா :

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா, பேபி கிருத்திகா, காளி வெங்கட், வி.டி.வி கணேஷ் மற்றும் ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள 'அருள்வான்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகிருக்கு.
இந்த டிரெய்லரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துருக்கிறாரு. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.