Also Watch
Read this
By: Manigandan Raja

2 சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் :
ஓமன் வளைகுடா பகுதியில் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைவர் ஆயதுல்லா அலி காமெனியின் இறுதிச் சடங்கின் போது, இறுதிச் சடங்கிற்காக ஈரானுக்கு ஒரு வாரம் விடுப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாகப் பேசியிருந்தார்.
இதனைதொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் சென்ற 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் கத்தார் உதவியுடன் இரு நாடுகளுக்கிடையே ஒரு வார போர்நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால் ஈரான் மீண்டும் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்தது.
வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயர்வு :

வெனிசுலா நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பல்வேறு குடியிருப்புகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் 17 ஆயிரத்து 854 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த பேரிடரால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 535 ஆக உயர்ந்துள்ள நிலையில், 16 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏவுகணை சோதனை நடத்திய சீனா - மற்ற நாடுகள் கவலை :

பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள கடற்பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தென் பசிபிக் கடற்பகுதியில் உள்ள இலக்கை ஏவுகணை அடைந்தது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ புகைப்படத்தையோ, ஏவுகணையின் மாதிரி வடிவங்களையோ சீனா வெளியிடாத நிலையில், இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளது.