news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இஸ்ரேல்-இந்தியா உறவை விமர்சித்த காங்கிரஸ்
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல்-இந்தியா உறவை விமர்சித்த காங்கிரஸ்

காங்கிரஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெய்ராம் ரமேஷ்

உலகமே வெறுக்கும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு ஏன்?

இஸ்ரேல் அமெரிக்காவை மட்டும் நம்பி இல்லை, இந்தியாவும் தங்களுக்கு ஆதரவை வழங்கி வருவதாக நெதன்யாகு கூறியிருந்த நிலையில், இந்தியா-இஸ்ரேல் உறவு குறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

காசாவில் இனப் படுகொலையையும், ஈரான் மற்றும் தெற்கு லெபனான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை லட்சக்கணக்கான இந்தியர்கள் கண்டித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மட்டும் மௌனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில், விருது பெறும் நோக்கத்திற்காக இஸ்ரேலின் செயலை கண்டிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் எனவும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

தொழில் துறை, ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் :

பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று நாடுகளுடனும் இந்தியா ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், பிரதமரின் இந்த பயணத்தின் மூலம் இந்தியத் தொழில் துறை மற்றும் ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சிறுமியின் குடும்பத்தினருக்கு திரிணாமுல் எம்.பி ஆறுதல் :

மேற்கு வங்க மாநிலம் பரூய்பூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், கொல்கத்தாவில் இருந்த சிறுமியின் குடும்பத்தினரை திரிணாமில் காங்கிரஸ் எம்பி டோலா சென்((Dola Sen)) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்வதறியாது அழுது புழம்பிய சிறுமியின் குடும்பத்தினர் அருகில் அமர்ந்து டோலா சென் ஆறுதல் கூறினார். ஞாயிற்றுக் கிழமை மதியம் பரூய்பூரில் உள்ள குளம் ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
இந்திய கடற்படையின் புதிய தயாரிப்பு

இந்திய கடற்படையின் புதிய தயாரிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

0
27 mins agoshare
ஹோர்முஸ் நீரிணை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau