news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சுட்டெரிக்கும் வெயிலால் பரவும் காட்டுத் தீ
tv

Also Watch

tv

Read this

சுட்டெரிக்கும் வெயிலால் பரவும் காட்டுத் தீ

ஈரான் நெகிழ்ச்சி பதிவு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காட்டுத் தீ

50 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் தீயில் கருகி நாசம் :

ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன. வெப்ப அலையில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியான நிலையில், காட்டுத் தீயும் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

போர்ச்சுக்கல்,கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில், தீயை அணைக்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் :

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில், 46 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டு ரஷ்யாவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை உக்ரைன் தலைநகர் கீவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 5 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 46-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நட்பு ரீதியிலான இந்தியாவுக்கு நன்றி: ஈரான் நெகிழ்ச்சி பதிவு : 

முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதற்காக இந்தியாவுக்கு ஈரான் அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், கமேனியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதற்காக, நட்பு ரீதியான இந்திய அரசுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால உறவை பிரதிபலிப்பதாகவும், துயரத்தின்போது ஈரான் மக்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய செயலாகவும் இது அமைந்ததாக தெரிவித்துள்ளார்.


Related Link
டிரம்புக்கு பொற்காலம், அமெரிக்கர்களுக்கு அல்வா, இடைத்தேர்தல் பாடம் புகட்டுமா?

டிரம்புக்கு பொற்காலம், அமெரிக்கர்களுக்கு அல்வா, இடைத்தேர்தல் பாடம் புகட்டுமா?

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூர் துயரம், திமுக மனு வாபஸ், என்ன நடந்தது?

5
14 mins agoshare
கரூர் துயரம், திமுக மனு வாபஸ், என்ன நடந்தது?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau