Also Watch
Read this
By: Manigandan Raja

விளையாட்டு மற்றும் விளம்பரங்கள் மூலம் வருமானம் சேர்ப்பு :
சர்வதேச கால் பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவித்த நிலையில், அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 4 ஆயிரத்து 285 கோடி ரூபாய் என
Celebrity Net Worth என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பிடப்பட்டுள்ளது.
நெய்மர் இதுவரை கால்பந்து போட்டிகளில் விளையாடி பெற்ற வருமானம் மட்டுமே, 6 ஆயிரத்து 677 கோடி ரூபாயை தண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நெய்மரின் வருமானத்தில் பெரும்பகுதி, அவர் சாண்டோஸ், பார்சிலோனா, பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் மற்றும் அல் ஹிலால் அணிகளில் இருந்தபோது பெற்ற பெரும் சம்பளங்கள் மற்றும் வீரர் பரிமாற்றத்தில் வந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர் காலிறுதிக்கு தகுதி :

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜானிக் சின்னர், தொடர்ந்து ஐந்தாவது முறையாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜானிக் சின்னர், ஜப்பானின் ஷிந்தாரோ மொச்சிசூகியை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர், 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க வீரருக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடை :

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் red card வழங்கப்பட்டதால் அமெரிக்க வீரர் Folarin Balogun-க்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடை, டிரம்ப்பின் தலையீடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், FIFA தலைவர் கியானி இன்பான்டினோவை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பலோகனின் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை மறுபரீசிலனை செய்த பிபா பெல்ஜியத்திற்கு எதிரான Round of 16 போட்டியில் Folarin Balogun விளையாடுவதற்கு FIFA அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.