Also Watch
Read this
By: Manigandan Raja

சொதப்பல் ஆட்டம் காரணமாக தேர்வு செய்யாத தேர்வுக்குழு :
அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியில் மோசமாக ஆடியதால், அவருக்கு பதில் வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டார். மோசமான ஃபார்ம் காரணமாக சஞ்சுவை தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் தயக்கம் காட்டினர்.
ஜிம்பாப்வே-வங்கதேசம் மோதிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் :

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 36.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக நியாம் ஹூரி 33 ரன்கள் எடுத்தார். பின்னர் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய வங்கதேச அணியால் ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போனது. 33.3 ஓவர்களில் வங்கதேச அணி 116 ரன்களுக்கு சுருண்டது. ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் மற்றும் பிராட் தலா 3 விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு :

இங்கிலாந்து தொடருக்குப் பின் ஜிம்பாப்வே அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அணியில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, இஷன் கிஷன், சிவம் துபே, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் டி-20 போட்டி வரும் 23ஆம் தேதி ஜிம்பாப்வேவின் ஹராரே நகரில் நடைபெறுகிறது.