Also Watch
Read this
By: Manigandan Raja

புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறேன்-டொனால்டு டிரம்ப் :
4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு அதிபர்களும் விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். இதுவரை தான் எட்டு போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்.
போர் நிறுத்தம் குறித்து புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருவதாக கூறினார். மற்ற போர்களை போன்று ரஷ்யா-உக்ரைன் போரையும் தான் விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறினார்.
இந்தோனேசியா சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு :

இந்தோனேஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜகார்த்தா விமான நிலையத்தில் அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ பிரதமர் மோடியை வரவேற்ற நிலையில், அரசு முறைப்படியான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, வரவேற்பு அளிக்கும் வகையில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மோடி, கைதட்டி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக, இந்தோனேசிய வான் எல்லையை அடைந்த பிரதமர் மோடியின் விமானத்தை, அந்நாட்டின் ஜெட் விமானங்கள் புடைசூழ்ந்து வரவேற்று அழைத்துச் சென்றன. இதை விமானத்தில் இருந்தபடியே பிரதமர் மோடி பார்வையிட்டார்.