Also Watch
Read this
By: Manigandan Raja

ஐ.என்.எஸ். மகேந்திரகிரி போர்க்கப்பல் வரும் 11ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது :
இந்திய கடற்படையின் புதிய தயாரிப்பான ஐ.என்.எஸ். மகேந்திரகிரி போர்க்கப்பல், வரும் 11ம் தேதி விசாகப்பட்டினம் தளத்தில் வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. ஏவுகணை பாயும் தொழில்நுட்பம், மேம்பட்ட தொடர்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட இந்த கப்பல், 75 சதவிகதம், உள்நாட்டு மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு :

பஹல்காம் தாக்குதல் வழக்கில், பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளி என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பஹல்காமில் கடந்தாண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பரில் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முக்கிய சதிகாரனாக பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் பெயர் இடம்பெற்று இருந்தது.
இந்த சூழலில், இன்று என்ஐஏ தாக்கல் செய்த மற்றொரு குற்றப்பத்திரிகையில் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.
கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை :

டெல்லியில் திருமணமான 72 நாட்களில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.புஷ்ப் விஹாரை சேர்ந்த அரேஸ்து சிக்கா - ஆக்ரிதி ஜோடி கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஆக்ரிதி, குடியிருப்பு வளாகத்தின் 3வது மாடியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள், ஆக்ரிதியிடம் அவரது கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டை கவனிக்க வேண்டும் என கூறி டார்ச்சர் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.