Also Watch
Read this
By: Manigandan Raja

ரயில் சென்ற வேகத்தில் மேம்பாலம் வரை மேலெழும்பிய நீர் :
மும்பையில் கனமழை காரணமாக தண்டவாளத்தை மூழ்கடித்த வெள்ளத்தை வந்தே பாரத் ரயில் கிழித்துக் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவு வருகிறது.
தண்டவாளத்தில் ரயில் வேகமாக சென்ற போது பேரலை போல் எழும்பிய மழைநீர், மேம்பாலத்திற்கு மேலே திடீரென அருவிபோல் கொட்டியதால் வாகன ஓட்டிகள் திகைத்து போகி வாகனத்தை நிறுத்தினர்.
கனமழை காரணமாக சாலையில் தேங்கிய வெள்ளம் :
மும்பையை போலவே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக முக்கிய சாலைகளில் குளம் போல் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சில இடங்களில் குடியிருப்புகள் உள்ளே வெள்ளம் புகுந்தது.
E20 பெட்ரோல் விற்பனை எதிராக வாகன ஓட்டிகள் போராட்டம் :

நாடு முழுவதும் E20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை அவசர அவசரமாக செயல்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் முறையாக டெல்லியில் வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதன் மூலம் 22 சதவிகித மைலேஜ் குறைவதுடன் என்ஜினில் பிரச்சனை ஏற்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.