Also Watch
Read this
By: Manigandan Raja

"எனக்கு வருத்தம்" உருக்கமாக பேசிய அட்லீ :
'இதயம் முரளி' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட அட்லீ, மேடையில் உருக்கமாக பேசிருக்கிறாரு. அதில், "ஆகாஷ் ரொம்ப நாளா ஒரு கதையை வச்சிட்டு பண்ணனும்னு என்கிட்ட சொன்னான்.
அப்போ அத நானே தயாரிக்கிறன்னு சொன்னேன்.. அப்புறம் என்ன யோசித்தான் தெரியல.. நானே BETTER-ஆ தயாரிப்பேன்னு அவனே பண்ணிகிட்டான்.
எனக்கு என்னன்னா, ராஜா ராணிக்கு பிறகு காதல் படம் பண்ண முடியலன்னு ஒரு வருத்தம்.. அதனாலதான் அவன்கிட்ட இந்த படத்தை நான் தயாரிக்கவானு கேட்டேன்.." என்று மேடையில் உருக்கமாக பேசிருக்கிறாரு
‘புலி’ படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது :

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு, விஜய் நடித்த 'புலி' திரைப்படம் குறித்து பேசிருக்கிறாரு. அதில், "புலி திரைப்படம் 8 முதல் 15 வயது வயதுடைய குழந்தைகளை மனதில் வைத்து தான் உருவாக்குனோம்.
ஆங்கிலத்தில் வெளியான 'Willow' போன்ற ஃபேண்டஸி (Fantasy) சாகசப் படத்தின் பாணியில் தான் புலி படத்தை உருவாக்க நினைத்தோம். ஆனால், படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் காரணத்தால அத ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமா விளம்பரப்படுத்திட்டாங்க.
ஒரு வேல, குழந்தைகளிடம் அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தால், குடும்ப ரசிகர்களும் திரையரங்கிற்கு வந்து அதை மிகப்பெரிய வெற்றிப் படமா மாற்றியிருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் போலீசாக நடிக்கும் சூர்யா :

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 47' திரைப்படம் முழுக்க முழுக்க கலகலப்பான பொழுதுபோக்கு படமா உருவாகி வருவதாக தகவல் வெளியாகிருக்கு.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆவேசம் (Aavesham) படத்தின் அதிரடி-காமெடி பாணியை நினைவூட்டும் வகையில் இந்த படம் இருக்கும்னு சொல்றாங்க.
இந்தப் படத்தில் சூர்யா, வித்தியாசமான குணம் கொண்ட, ஜாலியான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறாராம். அவருடன் பணியாற்றும் போலீஸ் குழுவும் மிகவும் வேடிக்கையான குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் விசாரிக்கும் வழக்கு மட்டும் மிகவும் சீரியஸானதாக இருக்கும்னு சொல்றாங்க. இந்த 'சூர்யா 47' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும்னு சொல்லப்படுது.
மேக்கப் குறித்து ஓப்பனாக பேசிய காஜல் அகர்வால் :

நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றுருக்கு.
இதில் கலந்து கொண்டு பேசிய காஜல் அகர்வால், "நான் சினிமாவுக்கு வந்த காலத்தில், 'ஏர்போர்ட் லுக்' முதல் ஒவ்வொரு பொது நிகழ்ச்சியிலும் எப்படி தோன்றுகிறோம் என்பதை யாரும் பெரிதா ஆராய்ந்து பார்க்க மாட்டாங்க.
அதனால அப்போ இயல்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடிஞ்சிச்சு. அதே மாதிரி, "எப்போதும் முழு மேக்கப்புடன் இருக்க வேண்டிய கட்டாயமும் அப்போ இல்ல.ஆனா இப்போ சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமா இருக்கு.. இதனால இளம் நடிகைகளை நினைத்து நான் உண்மையிலே வருத்தப்படுறேன்.." என்று பேசியுள்ளார்.
விவாகரத்துக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் லிசி :

1988-ஆம் ஆண்டு வெளியான 'சித்ரம்' திரைப்படத்தில் லிசியை பிரியதர்ஷன் இயக்கியிருந்தாரு. அந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் திருமணம் செஞ்சுருந்தாங்க.
இதன் பின், கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வாங்கிருந்தாங்க. இவர்களுக்கு கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறாங்க.
இதில், கல்யாணி தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துட்டு இருக்கிறாங்க. இந்த நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள புதிய விளம்பரப் படத்தில் லிசி மீண்டும் நடிக்க இருக்கிறாங்க. இதன் மூலம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிசி திரையில் தோன்ற இருக்கிறாங்க என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த தயாரிப்பில் களமிறங்கும் பிரதீப் :

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் என்னவா இருக்கும்னு' எதிர்பார்த்துட்டு இருந்த ரசிகர்களுக்கு சூப்பரான அறிவிப்பு வீடியோ வெளியாகிருக்கிறது. அதில், மமிதா பைஜூ, அஸ்வத் மாரிமுத்து, ஸ்வாதிகா, அனாமிகா மஹி மற்றும் தெலுங்கு நடிகர் சோந்தினேனி சிவாஜி (Sontineni Sivaji) போன்றவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாதிரி தெரியுது.
இதன் பின் பிரதீப் ரங்கநாதன், LAUNCHING என்ற எழுத்துடன் தனது புதிய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம் பண்ணுறாரு. சாய்அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தை 6 திரைப்பட இயக்குநர்கள் இயக்க உள்ளதா வீடியோ மூலம் தெரிய வருது. இந்த 6 இயக்குநர்களும் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.