Also Watch
Read this
By: Manigandan Raja

செஷல்ஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி :
செஷல்ஸ் நாட்டில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட உயரிய விருது போலியானது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்திருந்த நிலையில், இந்தியா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
கவாஜா ஆசிப் ஒரு மனநிலை சரியில்லாதவர் என்றும், பாதுகாப்பு துறையை அவருக்கு ஒப்படைத்திருப்பது பாகிஸ்தானின் தற்போதைய அவல நிலையை தெளிவாகக் காட்டுவதாவும் மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி :

ஜூலை 30-ம் தேதி நடைபெறும் பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முதல் முறையாக போட்டியிட உள்ளார்.
அரசியல் வியூக வகுப்பாளரான இவர், பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு தனது தேர்தல் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பங்கிபூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
காணாமல் போன 12 வயது சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு :

மேற்கு வங்க மாநிலத்தில் 12 வயது சிறுமி மர்மமான முறையில் பலியான சம்பவத்தில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய குடும்பத்தினர், சந்தேகத்திற்குள்ளான நபரை அடித்தே கொன்றனர். பரூய்பூரில் ஞாயிறு மதியம் 12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அப்பகுதியை சேர்ந்த 40 வயதான நபர்தான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் எனக் கருதி, அந்த நபரை அடித்தே கொன்றனர்.