Also Watch
Read this
By: Manigandan Raja

மரத்தில் கொடி சிக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தார் :
அமெரிக்காவில் மிகப்பெரிய தேசிய கொடியை சுமந்த படி வீரர் ஸ்கை டைவிங் செய்த நிலையில் கீழே இறங்கிய போது திடீரென மரத்தில் கொடி சிக்கியதால், அவர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.
பாரம்பரிய நிகழ்ச்சியின் தொடக்க விழா கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த சம்பவத்தில், நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அமெரிக்கா மட்டும் நட்பு நாடு இல்லை, இந்தியாவும் தான்:

இஸ்ரேலின் ஒரே ஒரு வலிமையான நட்பு நாடு அமெரிக்கா மட்டும் தான் என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மறைமுகமாக எச்சரித்திருந்த நிலையில், அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி தந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், அமெரிக்காவை தாண்டி இந்தியாவில் தங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இருப்பதாக கூறினார்.