Also Watch
Read this
By: Manigandan Raja

டி20-ல் 100 விக்கெட் வீழ்த்திய முதல் சுழல்பந்து வீச்சாளர் :
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் அக்சர் படேல் புதிய சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியதின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.
ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் 4-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 134 விக்கெட்களுடன் அர்ஷ்தீப்சிங் முதலிடத்திலும், 121 விக்கெட்களுடன் பும்ரா 2-வது இடத்திிலும், 114 விக்கெட்களுடன் ஹர்திக் பாண்ட்யா 3-வது இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் சாம்சன் :

மோசமான பார்ம் காரணமாக அடுத்து வரும் ஜிம்பாப்வே-க்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பில்லை என தெரிகிறது.
அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் சாம்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரிலும் பெரிய அளவில் சோபிக்காததால், ஜிம்பாப்வே தொடரில் சாம்சனை தேர்வு செய்ய தேர்வுக்குழு தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
ஜிம்பாவ்பே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 23ஆம் தேதி ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் :

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக செயல்பட்டு வந்த இவர், கடந்த 2023-ம் ஆண்டு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷான் மசூத் நியமிக்கப்பட்டார்.
ஆனால், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில் 12 போட்டிகளில் தோல்வியடைந்தது. எனவே, டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிப் ஜாவத் தெரிவித்துள்ளார்.