Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை எண்ணூர் கடற்கரை சாலையான தாழங்குப்பம் கடற்கரை சாலையில் தினந்தோறும் இளைஞர்கள் உயிரை பணயம் வைத்து பைக் சாகசங்கள் நடத்தி வருகின்றனர் இதனால் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்த ஏற்படுத்தும் வகையில் வாகனத்தில் அதிவேகமாகச் சென்று வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இன்ஸ்டா பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக உயிரை கூட பொருட்படுத்தாமல் இளைஞர்களும் பெண்களும் ஈடுபட்டு உள்ளது,
சாகச நிகழ்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களின் போலீஸ் கண்களுக்கு தெரியவில்லையா இதனால் வாகன ஓட்டிகள் இடையே தங்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்படுமோ என்ற மிகுந்த அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் எண்ணூர் போலீசார் தினந்தோறும் எண்ணூர் கடற்கரை சாலையில் ரோந்து வாகனத்தில் செல்கிறார்களா சாகசம் நிகழ்ச்சியால் எத்தனை உயிர்கள் பலியாகி உள்ளது என்பது கூட போலீசாருக்கு தெரியாதா கடற்கரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுடைய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.