Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே கேட்டில் பணியில் இருந்த கேட் கீப்பர் சந்தீப் சகர், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு சென்ற ரயில் அரசூர் பகுதியை கடக்கும் போது அந்த ரயிலில் ஒருவர் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தயாராவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர்.
ரயில் அருகில் நெருங்கி விட்ட போதிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றினார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியது.

தன் உயிரை பொறுப்பெடுத்தாமல் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது.