Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான தூய இம்மானுவேல் தேவாலயம் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் கடந்த நவம்பர் 2024 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2025 ஆம் ஆண்டு வரை திருமண்டல பெருமன்ற உறுப்பினராக ஆப்ரஹாம் மற்றும் அருள் ஜெகன் அப்போது குருவானவராக ஹாரிஸ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2025 நவம்பர் மாதம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் இந்த ஆலயத்தில் பதவி ஏற்றனர் தற்போது இந்த ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினராக கிறிஸ்டோபர் மற்றும் ஆலய குருவாக காலேப் மான்சிங் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் ஆலய கணக்குகளை சரிபார்த்த போது.
பழைய திருமண்டல உறுப்பினர்களான ஆபிரகாம் மற்றும் அருள் ஜெகன் மற்றும் குருவானவர் ஹாரிஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து பக்தர்களின் காணிக்கை பணம் மற்றும் ஆலயத்திற்காக வழங்கப்பட்ட பல்வேறு பணங்கள் என ரூபாய் 19 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்ட நிர்வாகத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது இந்த பணம் தொடர்பாக விசாரணைக்கு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட தரப்பினர் புதிதாக ஆலய குருவாக செயல்பட்டு வரும் காலேப் மான்சிங் மீது ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மீது அவர் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வருகிறார் என புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று தூய இம்மானுவேல் ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் கூறுகையில் 19 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பழைய நிர்வாக உறுப்பினர்களிடம் பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி ஈடுபட்டு வருகின்றனர்.
இதை மறைக்கும் வகையில் தற்போது இவ்வாறு பொய்யான புகார்களை தெரிவித்து வருவதாக கூறினர் தற்போதைய நிர்வாகம் மற்றும் குருவானவர் ஆகியோர் ஆலயத்தை சிறப்பாக வழி நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.