news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குமரியில் ராட்சத அலையில் சிக்கிய நாட்டுப்படகு
tv

Also Watch

tv

Read this

குமரியில் ராட்சத அலையில் சிக்கிய நாட்டுப்படகு

கோவளம், கன்னியாகுமரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பரவலாக பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது காற்றின் வேகம் அதிகளவு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப் படையில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்ற கோவளம் பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் போது காற்றின் வேகத்தால் திடீரென எழுந்த ராட்சத அலையில் நாட்டு படகு சிக்கி படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகிலிருந்து மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் தத்தளித்தனர். கடற்கரையோரம் நின்ற சக மீனவர்கள் உடனடியாக சென்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக
மீனவர்களுக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

மேலும் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்த நிலையில் படகில் உள்ள என்ஜின், மீன்வலை, முற்றிலும் சேதமடைந்தன.

Related Link
ஏகாம்பரநாதர் கோவிலில் பரதநாட்டியமாடி ரீல்ஸ் எடுத்த பெண்

ஏகாம்பரநாதர் கோவிலில் பரதநாட்டியமாடி ரீல்ஸ் எடுத்த பெண்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து

1
28 mins agoshare
திருச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau