Also Watch
Read this
By: Manigandan Raja

ஆனைமலை அடுத்த நவமலையில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பழங்குடியினர் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர் இங்கு உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பணி நிமிர்த்தமாக இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆழியார் கவியருவி நவமலை சாலையில் குட்டிக் கொம்பன் என்கின்ற ஒற்றைக் காட்டு யானை இப்பகுதியிலேயே முகாமிட்டு நவமலை சாலையில் அவ்வப்போது ஒய்யாரமாக நடை நடந்து வருவதும் பின்பு சாலை ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபடுவதுமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி நவமலை செல்பவர்கள் இருசக்கர வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.