news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூட்டிய வீட்டின் சமையலறையில் திடீர் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

பூட்டிய வீட்டின் சமையலறையில் திடீர் தீ விபத்து

கோடிமுனை, கன்னியாகுமரி

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK House fire

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தில் உள்ள வீட்டின் சமயலறையில் திடீர் தீ விபத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்.

போராடி தீயை அணைத்த போதிலும் கிரைண்டர் மிக்சி ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் வீட்டில் ஆள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் பூட்டிய வீட்டில் இருந்த கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என குளச்சல் போலீஸார் விசாரணையில் தகவல்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றணி இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அந்த பகுதியிவ்
உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.

திங்கள்கிழமை மாலை ஆன்றணி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் இரு குழந்தைகளும் டியூசன் சென்றதால் கிரைண்டரில் மாவை போட்டு அரைத்து கொண்டிருந்த அவரது மனைவி கிரைண்டரை ஆப் செய்யாமல் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் சமயலறையில் இருந்து புகை மூட்டம் வெளியேறியதால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது
வீட்டின் சமயலறையில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து மின்சாரத்தை துண்டித்து சமயலறையில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சியடித்து அணைத்தனர் தீயை அணைத்த போதிலும்.

வீட்டின் சமயலறையில் இருந்த கிரைண்டர் மிக்சி ஃபிரிட்ஜ் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது வீட்டின் உள்ள அறை முழுவதிலும் புகை மூட்டம் பரவிய நிலையில் வீட்டில் ஆள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து குளச்சல் போலீஸார் நடத்திய விசாரணையில்.

மாவு அரைக்க ஆண் செய்த கிரைண்டரை கவனக்குறைவாக ஆப் செய்யாமல் வீட்டை பூட்டி சென்றதால் கிரைண்டரில் ஏற்பட்ட மின் கசிவே திடீர் தீ விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : மின்கசிவு காரணமாக டீ கடையில் தீ விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 26 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved