Also Watch
Read this
By: Web Team

சென்னை ஈசிஆர் சாலை கானாத்தூர் பகுதியில் எதிர்திசையில் அதிவேகமாக பல்சர் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர், சாலையோரம் இருந்த மாடுகளின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கானாத்தூரில் உள்ள தனியார் கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த கேரளாவை சேர்ந்த ஜாக்கப் ரெனிவர்கீஸ், அரியர் தேர்வு எழுதுவதற்காக சென்னை வந்தார். நள்ளிரவில் தேநீர் கடைக்கு சென்று விட்டு திரும்பும்போது அதிவேகத்தால் நேர்ந்த விபத்தில் அவருடன் வந்த மாணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதிவேகமாக பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டு மாடுகளும் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.