news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடிப்படை வசதி செய்து தரக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

அடிப்படை வசதி செய்து தரக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம்

மயிலாடுதுறை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
malliam

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மல்லியம் கடைவீதியில், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி பாஜக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மல்லியம் கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படாததை கண்டித்தும், 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் முறையாக கட்டித் தரவில்லை என்று குற்றம் சாட்டியும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 27 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau