news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் கைது
tv

Also Watch

tv

Read this

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் கைது

அமைச்சருக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனுமதி இல்லை
தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். சென்னை, எழும்பூரில் நடைபெறவிருந்த திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடை, மைக் செட்டுகளை அகற்றியதால் காவல்துறையுடன் கடும் வாக்குவாதம் செய்த திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

திமுக மாணவர் அணி போராட்டம்
திமுக மாணவரணி சார்பில் இன்று ஜூன் 29ஆம் தேதி, நடைபெறும் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்திருந்த நிலையில், அவரை பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தை திமுக மாணவரணி அறிவித்தது.

போராட்டக்காரர்கள் கைது
இந்த நிலையில், அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க கோரி திமுக மாணவரணி நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த வந்த திமுகவினரை போலீசார் கைதுசெய்தனர். போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி, திமுகவினரை போலீசார் கைதுசெய்து வருகின்றனர். இதனால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Link
அரசு மரியாதையுடன் இயக்குநர் பாக்யராஜ் விடை பெற்றார்

அரசு மரியாதையுடன் இயக்குநர் பாக்யராஜ் விடை பெற்றார்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மனமகிழ் மன்ற உரிமக் கட்டணம் ரூ.30 லட்சம்

4
14 mins agoshare
மனமகிழ் மன்ற உரிமக் கட்டணம் ரூ.30 லட்சம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau