Also Watch
Read this
சென்னையில், மனமகிழ் மன்றங்களுக்கான உரிமக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. புதிய விதிகளின்படி அதிகபட்சமாக, சென்னையில் 30 லட்சம் ரூபாயும், ஏனைய பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மன மகிழ் மன்றங்களில்...
தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981ல் திருத்தம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த திருத்தங்கள் 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிகரிப்பு
சென்னையில், மனமகிழ் மன்றம் தொடங்க 15 லட்சம் ரூபாயாக இருந்த சிறப்புக் கட்டணம் 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் 10,000 ரூபாய் உரிமக் கட்டணத்தை, 30,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மாநகராட்சிகளில்...
சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க 25 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நகராட்சிகளில், மனமகிழ் மன்றங்கள் தொடங்க 15 லட்சம் ரூபாய், மற்ற இடங்களில் 10 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 10 லட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க 20 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.