news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஐஏஎஸ்- ஐபிஎஸ்- ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

ஐஏஎஸ்- ஐபிஎஸ்- ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு தொடக்கம்

அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. முதலமைச்சர் விஜய் தலைமையில் மூன்று அமர்வுகளாக முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்க அனைத்துத் துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், வனத்துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கட்டிருந்தது.

சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்கத் திட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதலாவது அமர்வில் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்து ஆய்வு செய்யத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

மாநாடு தொடங்கியது...
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் மாநாடு சென்னையில் இன்று ஜூன் 29ஆம் தேதி காலை தொடங்கியது. இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள், அரசு நிர்​வாகத்​தில் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு உள்பட பல்வேறு விஷ​யங்​கள் குறித்து முதல்​வர் விஜய் விரி​வான ஆய்வு மேற்​கொள்கிறார். திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பல்வேறு அறிவுறுத்​தல்​களை​யும், உத்​தர​வு​களை​யும் முதல்வர் விஜய் வழங்​க உள்ளார்.

சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது பற்றி முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இன்று நடக்கும் மாநாட்டில் காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்ட்ரிக்ட் உத்தரவுகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து அறிவுறுத்தல்களை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link

"தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்"- மு.க.ஸ்டாலின் அழைப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா பின்னணி என்ன?

3
6 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau